Saturday, December 21, 2024

சிக்கிவேனா? விலகுவேனா?

செந்நிற சிலந்தியின் வலை 
சீராகப்பபின்னப்பட்டிருத்தன....
சீரான நேர்த்தியான பார்வை என்னை அழைக்கிறது, அருகில் வா! வாவென 
அதன் கண்கள் மிளிர்க்கிறது.
நானோ தொட்டு விடவா? தூரம் செல்லவா?என யோசிக்கும்பொழுது 
செல்லாதே அருகில் செல்லாதேவென 
எச்சரிக்கை சத்தம்  அருகில் கேட்கிறது 
ஆனால் நகர முயல்கிறேன் முடியவில்லை 
செல்லட்டுமா விலகட்டுமா?
யோசிக்கிறேன்.........

கவியாழி....

Tuesday, July 2, 2013

புதிய தமிழ்ப் பெயர்கள்-ஆண்

கவியாழி

நகையாழி

இசையாழி

தேனமுதன்

யாழிசையன்

அறிவேந்தன்

ஆசையன்

இனியமொழி

மனமதியான்

இசையன்பன்

ஏழிசையான்

இயழிசையான்

பேரோளியான்

புகழினியான்

செழுநிலவன்

சீரழகன்

வெண்ணிலவன்

நகையன்பன்

சொல்லழகன்


ஒரு சில நண்பர்களின் விருப்பத்திற்கிணங்க புதிய தமிழ்ப் பெயர்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்

Friday, June 28, 2013

பிறந்தநாள் திருத்தங்கள்






யாருக்காய் பிறந்தேன்
எதற்காய் வளர்ந்தேன்
பேருக்காய் கவித்தேன்
பெருமையாய் படைத்தேன்

வரும் சூலை மாதம்
பத்துக்குபிறகு பதினொன்றில்
எட்டிவைக்கும் பிறந்தநாள்
எதற்காய் வருகிறது
என்ன எனக்குத் தரவிருக்கிறது

எதையும் நோக்கவில்லை
எப்படியும் வாழ்ந்திடுவேன்
இருக்கும்வரை முடிந்தவரை
இயன்ற உதவி செய்திடுவேன்

நாலுபேருக்கு நன்மையாக
நாலுவார்த்தைச் சொல்லியே
ஊருப் பார்க்க வாழ்ந்திடுவேன்
உத்தமனாய் மகிழ்ந்திடுவேன்

Wednesday, June 19, 2013

இதுதான் பெண்மையோ?...

பூத்ததும்
பூவையானாள்...

பார்த்ததும்
பாவையானாள்....

ஏற்றதும்
மனைவியானாள்....

இணைத்தும்
மகிழ்ச்சியானாள்...

இறுதியில்
தாயுமானாள்...

ஆனாலும்
எப்போதுமே
எல்லோருக்குமே
அன்னையாகிறாள்.........

Thursday, June 13, 2013

அடிக்கடி அப்பா சொல்வது...

Photo

"எண்ணம் பழுதானால் எல்லாமே பழுதாகும்" 


நீ எப்போதுமே நல்லதையே செய்து வந்தால் தவறில்லை அடுத்தவரை கெடுக்க நினைத்தால் அதற்குள்ளே நீ மாட்டிக் கொள்வாய் அவரோடு நீயும் கெட்டோழிவாய் அதனால் எபோதுமே முடிந்தால் உதவி செய் .முடியாவிட்டால் ஒதுங்கிசெல் என்று சொல்லுவார்.அதை நான் இன்றுவரை கடைபிடித்து வருகிறேன்.

"கொடுத்து வாழ்.கெடுத்து வாழாதே"

ஆம் உன்னிடம் அதிகமாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறிதளவாவது யாருக்கேனும் உதவி செய்.குடிப்பவனுக்கும்  கொடுமைக்காரனுக்கும் சோம்பேறிகளுக்கும்  கொடுக்காமல் வறுமையில் இருக்கும் குடும்பத்திற்கு  எப்போதுமே இல்லையென்று சொல்லாமல் இருப்பதில் சிறிதாவது உதவி செய்  என்று சொன்னதால் இன்றும் கடைப்பிடித்து  வருகிறேன்.

"உடன் பிறந்தவளை மறக்காதே உதவி செய்ய மறுக்காதே"

இதுவும் அப்பா அடிக்கடி சொல்லும்  வார்த்தையிது.எங்களுக்குபின்னே பிறந்த வீட்டில் நம்மை அன்போடும் ஆசையோடும் பேச பழக கொடுக்க யாருமில்லையே என்று ஏங்க வைத்துவிடாதே இயன்றதை செய்து உடன்பிறந்த பெண்பிள்ளைகளை கவனித்துக்கொள்.அதையும் இன்றுவரை செய்து வருகிறேன்.என்னிடம் இருப்பதில் கிடைத்ததை எனது மனைவி அறிய உதவி வருகிறேன்

Monday, June 10, 2013

சின்னஞ்சிறு விதைகள்: ராமேஸ்வரம் கடற்கரையின் எழில்மிகுத் தோற்றமும் படகு ...

சின்னஞ்சிறு விதைகள்: ராமேஸ்வரம் கடற்கரையின் எழில்மிகுத் தோற்றமும் படகு ...:  அனுமதிக் கட்டணமாக ஒவ்வொருவருக்கும் ரூபாய்  அறுபது செலுத்தியதும் அனுமதிக்கப் படுகிறார்கள் கடலிலிருந்து கோவிலின் எழில்மிகுத் தோற்றம் ...

ராமேஸ்வரம் கடற்கரையின் எழில்மிகுத் தோற்றமும் படகு சவாரியும்.படம் மற்றும் காணொளி

 அனுமதிக் கட்டணமாக ஒவ்வொருவருக்கும் ரூபாய்  அறுபது செலுத்தியதும் அனுமதிக்கப் படுகிறார்கள்

கடலிலிருந்து கோவிலின் எழில்மிகுத் தோற்றம்
காணொளிக் காட்சி படகுத்துறையிலிருந்து எடுத்தது,

மாலை நேரத்தில் மிகவும் ரம்மியமாக  அமைதியாக இருக்கும் கடலைப் பார்க்கும் பொது மனதும் இதமாகிறது.ஆண்டவனுக்கு அடுத்த காட்சி கடற்கரைக் காட்சியே மனதை மகிழச்செய்கிறது.

காலையில் இருக்கும் கூட்டம் மாலையில் அவரர் இருப்பிடங்களுக்கும் வெளியிலும் சென்று விடுவதால் மாலை நேரத்தில் கடற்கரைக்கு சென்றால் உங்கள் மகிழ்ச்சிக்கு நானே உத்தரவாதம் தருகிறேன்,

ராமேஸ்வரம் கடற்கரையைப் பார்க்கும் போதே மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.நீங்களும் செல்லுங்கள் நிம்மதியை அனுபவியுங்கள்