Friday, May 31, 2013

நன்றியுள்ள நண்பன்

இன்றைய காலகட்டத்தில் என் வருகையை எப்போதும் எதிர்பார்த்து நிற்கும் நண்பன் எனது வளர்ப்பு நாய் இஸ்நூப்பி(snoopy)ஜெர்மன் spitz இனத்தைச் சார்ந்தஆண் நாய்.என்னை எப்போதும் உற்சாகமாய் வைத்திருக்கும் நண்பன். சிலநேரங்களில் வெறுப்பாக இருந்தாலும் என்னை அன்பால் அடிமையாக்கும் திறமை இவனுக்கு உண்டு.உடனே பந்தை எடுத்துக்கொண்டு விளையாட அழைக்கும் அப்போது எனக்கு எல்லா வருத்தமும் மறைந்துவிடும் . ஒவ்வொரு முறையும் நான் வெளியே சென்றுவிட்டு வரும்போதெல்லாம் வாலை ஆட்டி மேலே உரசி செல்லும் தோழன். வீட்டிற்குள்ளே வரும்போதே எனது கால் பெருவிரலை நுகர்ந்துப் பார்த்து நான் எங்கே சென்று வந்தேன் என அறிந்து என்னை ஒருமுறைப் பார்ப்பது எனக்கு விந்தையாக உள்ளது. அலுவலகம் செல்லும் நேரம் வரும்நேரம் சரியாகத் தெரிந்து வைத்துள்ளது . சனி,ஞாயிறு கிழைமைகளில் எனக்கு விடுமுறை என்பதைகூடப் புரிந்து வைத்துள்ளது. இன்னுமோர் ஆச்சரியமான தகவல் என்னவெனில் அதனுடைய பந்து விளையாடும்போது சுழலப் பந்துபோல சுழற்றிப் போடும். மனிதனாய் பிறக்காத மனிதநேயம் என்னுடைய நாய்க்கு உள்ளதாக நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் எனக்கு ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியைத் தரும் எனது நாய்க்குட்டியும் எனக்கு நல்ல நண்பன்