Thursday, June 13, 2013

அடிக்கடி அப்பா சொல்வது...

Photo

"எண்ணம் பழுதானால் எல்லாமே பழுதாகும்" 


நீ எப்போதுமே நல்லதையே செய்து வந்தால் தவறில்லை அடுத்தவரை கெடுக்க நினைத்தால் அதற்குள்ளே நீ மாட்டிக் கொள்வாய் அவரோடு நீயும் கெட்டோழிவாய் அதனால் எபோதுமே முடிந்தால் உதவி செய் .முடியாவிட்டால் ஒதுங்கிசெல் என்று சொல்லுவார்.அதை நான் இன்றுவரை கடைபிடித்து வருகிறேன்.

"கொடுத்து வாழ்.கெடுத்து வாழாதே"

ஆம் உன்னிடம் அதிகமாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறிதளவாவது யாருக்கேனும் உதவி செய்.குடிப்பவனுக்கும்  கொடுமைக்காரனுக்கும் சோம்பேறிகளுக்கும்  கொடுக்காமல் வறுமையில் இருக்கும் குடும்பத்திற்கு  எப்போதுமே இல்லையென்று சொல்லாமல் இருப்பதில் சிறிதாவது உதவி செய்  என்று சொன்னதால் இன்றும் கடைப்பிடித்து  வருகிறேன்.

"உடன் பிறந்தவளை மறக்காதே உதவி செய்ய மறுக்காதே"

இதுவும் அப்பா அடிக்கடி சொல்லும்  வார்த்தையிது.எங்களுக்குபின்னே பிறந்த வீட்டில் நம்மை அன்போடும் ஆசையோடும் பேச பழக கொடுக்க யாருமில்லையே என்று ஏங்க வைத்துவிடாதே இயன்றதை செய்து உடன்பிறந்த பெண்பிள்ளைகளை கவனித்துக்கொள்.அதையும் இன்றுவரை செய்து வருகிறேன்.என்னிடம் இருப்பதில் கிடைத்ததை எனது மனைவி அறிய உதவி வருகிறேன்

10 comments:

  1. அனைவரும் மனனம் செய்து கொள்ளவேண்டிய
    மந்திரச் சொற்கள் அல்லவா தங்கள்
    தந்தை சொன்னது,
    இதனி பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அனுபவித்துச் சொன்னது அடக்கத்தோடு நடக்கிறேன் செய்கிறேன்

      Delete
  2. அப்பாவோட அறிவுரைகள் அனைத்தும் அருமை.. அதுலயும் 3வது மிகச்சரி.., பிறந்த பெண்கள் கண்ணீர் வடிச்சா வீடு உருப்படாதுன்னு எங்கம்மாவும் சொல்வாங்க

    ReplyDelete
    Replies
    1. பெத்தவங்க பேச்சை மதிச்சாதான் மத்தவங்க நமக்கு மரியாதை தருவாங்க

      Delete
  3. அருமையான அறிவுரைகளை உங்கள் தந்தை சொல்லி உள்ளார்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே நல்லதைத்தான் சொன்னார் நானும் செய்கிறேன்

      Delete